சாக்கடை அள்ளும்போது விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் அமைப்பாளர் கொண்டைவெள்ளை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்தும், துப்புரவு பணியாளர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கவும் சட்டம் கொண

Update: 2016-12-17 22:45 GMT

மதுரை,

தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் அமைப்பாளர் கொண்டைவெள்ளை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்தும், துப்புரவு பணியாளர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பாதாளசாக்கடை, செப்டிக் டேங்க் போன்றவற்றில் கழிவுகளை மனிதர்கள் ஈடுபடுத்தக்கூடாது. ஆனால் இந்த சட்டத்தை தமிழகத்தில் முறையாக செயல்படுத்துவதில்லை. 1993–ம் ஆண்டில் இருந்து 2014 வரை சென்னை, அரியலூர், திண்டுக்கல், தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சாக்கடை அள்ளும்போது விஷவாயு தாக்கி 54 பேர் இறந்துள்ளனர். எனவே இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு குறித்து மத்திய–மாநில அரசுகள் வருகிற 5–ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்