உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிய வகை நத்தை குத்தி நாரை வனத்துறையினர் பிடித்து சென்றனர்

உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிய வகை நந்தை குத்தி நாரையை வனத்துறையினர் பிடித்து அமராவதி அணைப்பகுதியில் கொண்டு விட்டனர். அரிய வகை பறவை திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் கவுஸ்காலனி குடியிருப்பு பகுதியில் அரிய வகை பறவை இருப்பதாக உடுமலை வன

Update: 2016-12-17 22:00 GMT

உடுமலை,

உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிய வகை நந்தை குத்தி நாரையை வனத்துறையினர் பிடித்து அமராவதி அணைப்பகுதியில் கொண்டு விட்டனர்.

அரிய வகை பறவை

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் கவுஸ்காலனி குடியிருப்பு பகுதியில் அரிய வகை பறவை இருப்பதாக உடுமலை வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், உடுமலை வனச்சரக அலுவலர் மாரியப்பன் தலைமையில், தன்னார்வலர் லட்சுமணன், வன காவலர் காளிதாஸ் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அந்த அரிய வகை பறவையை பிடித்து உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அணைப்பகுதியில்...

பின்னர் அந்த பறவையை பார்த்த போது, அது அரியவகை நத்தை குத்தி நாரை என்பது தெரியவந்தது. இந்த வகை நாரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடற்கரையையொட்டி உள்ள நீர்நிலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் காணப்படும்.

மற்ற பகுதிகளில் சீசன் காலத்துக்கு ஏற்ப குளம், குட்டை, அணைகள் போன்ற நீர்நிலைகளை தேடி வரக்கூடியது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் இந்த நத்தை குத்தி நாரையை வனத்துறையினர் அமராவதி அணைப்பகுதியில் கொண்டு விட்டனர்.

மேலும் செய்திகள்