வார்தா புயலால் மண்ணிவாக்கம் கிராமத்தில் வாழை, தென்னை மரங்கள் சாய்ந்தன

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் கிராமத்தில் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் வாழை, தென்னை, கொய்யா, மா, பலா போன்ற மரங்களை பயிரிட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வார்தா புயல் தாக்கத்தால் இந்த பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள

Update: 2016-12-17 22:45 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் கிராமத்தில் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் வாழை, தென்னை, கொய்யா, மா, பலா போன்ற மரங்களை பயிரிட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வார்தா புயல் தாக்கத்தால் இந்த பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தென்னை, மா போன்ற மரங்களை பயிரிட்டு வளர்பதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

எனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளை மண்ணிவாக்கம் பகுதிக்கு அனுப்பி வேரோடு சாய்ந்த மரங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்