பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

Update: 2016-12-17 22:30 GMT
குடவாசல்,

திருக்களம்பூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். குடவாசல் வட்ட வழங்கல் அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து 81 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

முகாமில் முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி கூறிய தாவது:-

தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு உணவு பொருட்களை தரமாகவும், குறிப்பிட்ட அளவுகளுடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர்கள் அனைத்து பொருட்களையும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும் வகையில், எடை குறையாமல் வழங்க வேண்டும். பயனாளிகள் தாங்கள் வாங்கும் பொருட்கள் தரமானவை தானா? என்றும் எடை போடும் போது தராசை கண்காணித்து எடை குறையாமல் பெற்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் சூர்யா, வட்ட வழங்கல் உதவி அலுவலர் காக்கரீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்