தொழில் அதிபரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்; வாலிபர் கைது

தார்வார் டவுன் ஹெப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெப்பள்ளி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசார

Update: 2016-12-17 22:56 GMT

உப்பள்ளி,

தார்வார் டவுன் ஹெப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெப்பள்ளி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒசூரு கிராஸ் பகுதியைச் சேர்ந்த ராமசந்திர கிருஷ்ண பூஜார்(வயது 26) என்பதும், இவர் அதேப்பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பசவராஜ் பூஜார் என்பவர் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி நடித்ததும், பின்னர் பசவராஜிடம் இருந்து ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்து கொண்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராமசந்திர கிருஷ்ண பூஜாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசந்திர கிருஷ்ண பூஜாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்