சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.23½ லட்சம் நலத்திட்ட உதவிகள் தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார். சிறுபான்மையினர் விழா தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ச

Update: 2016-12-18 23:00 GMT

தர்மபுரி,

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

சிறுபான்மையினர் விழா

தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா வரவேற்று பேசினார்.

விழாவில் கலெக்டர் விவேகானந்தன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் சிறுபான்மை நலத்துறை சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் மையம் மூலம் சிறுபான்மையின தொழில் முனைவோருக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அரசு மானியத்துடன் ரூ.5 லட்சத்துக்கான புளி பதப்படுத்தும் எந்திரம் வழங்கப்படும். சுயஉதவி குழுக்கள் மூலம் இந்த எந்திரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன்கார்டு வேண்டி 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 13 பேருக்கு உதவித்தொகையாக ரூ.36 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தின் மூலம் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சிறுபான்மையினர் பொருளாதார முன்னேற்ற கழகத்தின் சார்பில் 24 பயனாளிகளுக்கு சிறு வணிக கடனான காசோலைகள், 5 சிறுபான்மையின பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரம் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், சிறுபான்மையின நல வாரிய உறுப்பினர்கள் அன்வர்பாஷா, அப்துல்காதர், தலைமை காஜி ஹேணிபஸேலே கரீம் சாய்பு, மாவட்ட முத்தவல்லிகள் சங்க தலைவர் ஜப்பார், மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்