புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்: எனது அனுபவங்களை விரைவில் புத்தமாக வெளியிடுவேன் கிரண்பெடி பேட்டி

புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் கூட்டுறவு புத்தக சங்கம் சார்பில் 20–வது தேசிய புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை பார்வையிடுவதற்காக கவர்னர் கிரண்பெடி நேற்று அங்கு வந்தார். பின்னர் புத்தக க

Update: 2016-12-18 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் கூட்டுறவு புத்தக சங்கம் சார்பில் 20–வது தேசிய புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த புத்தக கண்காட்சியை பார்வையிடுவதற்காக கவர்னர் கிரண்பெடி நேற்று அங்கு வந்தார். பின்னர் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட கவர்னர், அவர் எழுதிய புத்தகங்களை வாங்கியவர்களுக்கு ஆட்டோகிராப் (கையெழுத்து) போட்டு வழங்கினார். இதுபற்றி அறிந்ததும் புத்தக கண்காட்சிக்கு வந்து இருந்தவர்களில் பலர் கவர்னர் எழுதிய புத்தகங்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி அவரிடம் கையெழுத்து பெற்றுச் சென்றனர்.

அப்போது போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவரது குடும்பத்தினரும், கவர்னர் கிரண்பெடியின் புத்தகத்தை வாங்கி அவரிடம் கையொப்பம் பெற்றனர்.

பின்னர் அங்கு கிரண்பெடி கூறுகையில், ‘புதுச்சேரியின் நான் கவர்னராக பொறுப்பு ஏற்ற நிகழ்வுகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் எனது அனுபவங்களை விரைவில் புத்தகமாக வெளியிடுவேன்’ என்றார்.

முன்னதாக கண்காட்சிக்கு வந்த கவர்னரை புத்தக சங்கத் துணைத்தலைவர் பாஞ்.ராமலிங்கம், செயலர் முருகன் ஆகியோர் வரவேற்றனர். தலைவர் சீனு.ராமச்சந்திரன், இயக்குனர்கள் எ.மு.ராஜன், சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்