கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் முன்னாள் உள்துறை கூடுதல் செயலாளர் குற்றவாளி ஐகோர்ட்டு அதிரடி

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் முன்னாள் உள்துறை கூடுதல் செயலாளர் குற்றவாளி என மும்பை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. ஒலிமாசு கருவிகள் மராட்டியத்தில் விழாக்காலங்கள், ஊர்வலங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்படும் ஒலிமாசுவை அளவிடுவதற்காக வசதியாக மாநில

Update: 2016-12-18 22:53 GMT

மும்பை,

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில முன்னாள் உள்துறை கூடுதல் செயலாளர் குற்றவாளி என மும்பை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.

ஒலிமாசு கருவிகள்

மராட்டியத்தில் விழாக்காலங்கள், ஊர்வலங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்படும் ஒலிமாசுவை அளவிடுவதற்காக வசதியாக மாநில அரசு சார்பில் ஒலிமாசு கண்டறியும் கருவி வாங்கி போலீஸ் நிலையங்களுக்கு கொடுக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக வழக்கு ஒன்று மும்பை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அப்போதைய உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பி.பக்ஷி பிரமாணப்பத்திரம் ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், நவம்பர் மாதத்தில் 1,843 மாலிமாசு கண்டறியும் கருவிகள் வாங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

குற்றவாளி

ஆனால் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டபடி மாநில அரசு சார்பில் ஒலிமாசு கருவிகள் வாங்கப்படவில்லை. இதையடுத்து சென்ற மாதம் கே.பி.பக்ஷிக்கு எதிராக ஐகோர்ட்டு, கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசு பிறப்பித்தது.

உள்துறை கூடுதல் செயலாளராக இருந்த கே.பி.பக்ஷி அண்மையில் பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிபதி ஏ.எஸ்.ஓஹா தலைமையிலான டிவிசன் பென்ச் அதிரடியாக அறிவித்தது.

மேலும் இது தொடர்பாக அவர் வருகிற 23–ந்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின்னர் கே.பி.பக்ஷிக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


மேலும் செய்திகள்