சேலம் அருகே பரபரப்பு: அரசு பஸ் கண்டக்டர்–பயணிகள் மோதல்

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தம்மம்பட்டி வழியாக சேலத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று காலை துறையூரில் இருந்து புறப்பட்டு வந்த போதே பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அந்த பஸ் காலை 9.15 மணியளவில் சேலம் மாவட்டம் தம்மம்பட

Update: 2016-12-19 22:30 GMT

தம்மம்பட்டி,

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தம்மம்பட்டி வழியாக சேலத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று காலை துறையூரில் இருந்து புறப்பட்டு வந்த போதே பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அந்த பஸ் காலை 9.15 மணியளவில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அங்கும் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் பஸ்சில் முண்டியடித்து பயணிகள் ஏறினார்கள்.

இந்த நிலையில் டிரைவரின் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அது கண்டக்டர் இருக்கை என்று கூறி, கண்டக்டர் அனந்தராமன் பயணிகளை இருக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பஸ்சில் கூட்டம் அதிகளவில் இருந்ததால் முதியவர்கள் நின்று கொண்டு சிரமம் அடைந்தனர். இதை சுட்டிக்காட்டி பயணிகள் கண்டக்டருடன் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பயணிகள் செல்போனில் புகார் செய்தனர். இருப்பினும் சேலம் வரை அந்த கண்டக்டர் இருக்கையில் பயணிகள் யாரையும் இருக்க விடவில்லை. இதனால் சேலம் வரை அந்த பஸ்சில் பரபரப்பான சூழலே நிலவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்