கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட் கடைகள் மறுஏலத்தை ரத்து செய்ய வேண்டும் உணவு பொருட்கள் தயாரிப்பாளர், விற்பனையாளர் நலச்சங்கம் கோரிக்கை

கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட் கடைகள் மறுஏலத்தை ரத்து செய்ய வேண்டும் உணவு பொருட்கள் தயாரிப்பாளர், விற்பனையாளர் நலச்சங்கம் கோரிக்கை

Update: 2016-12-19 23:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட் கடைகளுக்கான மறுஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வட்டார சிறிய உணவு பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க கூட்டம்

கோவில்பட்டியில் வட்டார சிறிய உணவு பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்க பொதுக் குழு மற்றும் 5-ம் ஆண்டு விழா நடந்தது. சங்க தலைவர் முத்துராஜா, கவுரவ தலைவர் ஞானதுரை ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் கண்ணன், துணைதலை வர்கள் பழனிவேல், மூர்த்தி, ஆலோசகர்கள் வக்கீல் செல்வம், லட்சுமணன், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்று பேசினார்.

விக்கிரமராஜா பங்கேற்பு

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பேரமைப்பு மாநில துணை தலைவர் ராஜா, மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ், செயலாளர் நீதிராஜன், முன்னாள் தொழில் வர்த்தக சங்க தலைவர் பிரபாகரன், குளத்தூர் வர்த்தக சங்க தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், தராசு முத்திரை சட்டத்தில் பழைய முறையை பின்பற்ற வேண்டும், தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை அதிகளவில் புழக்கத்தில் விட வேண்டும்.

ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்

கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை மறு ஏலம் விடுவதை ரத்து செய்ய வேண்டும், 2-வது பைப்-லைன் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அண்ணா பஸ் நிலைய கட்டிட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்