திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டி துணைவேந்தர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டி துணைவேந்தர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்

Update: 2016-12-20 22:45 GMT
திருச்சி,

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டியை திருச்சியில் துணைவேந்தர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

தடகள போட்டிகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக் கின்றன. இதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பாராதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற 71 கல்லூரிகளை சேர்ந்த 1,340 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தடகள போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டும் ஓட்டம் என 58 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடக்க விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் கோபிநாத் கணபதி, திருச்சி ஜமால்முகமது கல்லூரி செயலாளர் காஜாநஜிமுதீன், கல்லூரி முதல்வர் முகமது சாலிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளின் பரிசளிப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பாபுராஜேந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கு கிறார்.

மேலும் செய்திகள்