கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு

கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு

Update: 2016-12-20 22:45 GMT
ஆற்காடு,

ஆற்காடு தொகுதிக்குட்பட்ட கணியம்பாடியில் கடந்த ஆண்டு அரசின் பொது நிதியில் ரூ.1 கோடியே 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 30 படுக்கை வசதிகள் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. இந்த கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் புதிய கட்டிடம் திறப்பு பணிகள் குறித்து மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இதற்கு அதிகாரிகள் தரப்பில் கட்டிட பணி முழுமையாக முடிவடைந்து திறக்க தயார் நிலையில் உள்ளது பற்றி அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்