சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 15–ந்தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் தங்கள் க

Update: 2016-12-20 22:19 GMT

புதுச்சேரி

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 15–ந்தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் புண்ணியகோடி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ராஜீவ்காந்தி சிக்னல் அருகே பட்டை நாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டமும், நாளை (வியாழக்கிழமை) முக்கிய வீதிகள் வழியாக சென்று கவர்னரிடம் மனு அளிப்பது என்றும், 23–ந்தேதி கலெக்டரிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை ஒப்படைப்பது என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்