தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்தனர்

புதுக்கோட்டை, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஒய்யாநேந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட

Update: 2016-12-31 23:00 GMT
புதுக்கோட்டை,

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஒய்யாநேந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒய்யா நேந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட் டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் ஒய்யாநேந்தல் ஆற்று பகுதியில் மணல் அள்ளி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் டிராக்டரில் அவர் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி வாகனத்தை சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் போலீசார் டிராக்டரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மீது எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி ஒய்யாநேந்தல் ஆற்று பகுதியில் மணல் அள்ளும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். இது குறித்து மனு அளித்தவர்கள் கூறுகையில், இனியும் நாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களை ஒன்று திரட்டி போராட போவதாக கூறினர்.

மேலும் செய்திகள்