புதுச்சேரி, காரைக்காலை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் பிரதமரிடம், நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, காரைக்கால் பகுதியை வறட்சி பாதித்தவையாக அறிவிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். பிரதமருடன் சந்திப்பு டெல்லியில் சரக்கு சேவை வரி தொடர்பான நிதி மந்திரிகள் கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண்ஜ

Update: 2017-01-04 23:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்கால் பகுதியை வறட்சி பாதித்தவையாக அறிவிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

பிரதமருடன் சந்திப்பு

டெல்லியில் சரக்கு சேவை வரி தொடர்பான நிதி மந்திரிகள் கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் உடனிருந்தார்.

வறட்சியால் பாதிப்பு

பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவை மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கடும் வறட்சி நிலவுவதாக தெரிவித்தார்.

பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை பிரதமரிடம் எடுத்துக் கூறினார். இதனால் பயிர்கள் கருகுவதாகவும் தெரிவித்தார். எனவே புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புள்ளி விவரங்கள்

இதுகுறித்த புள்ளி விவர தொகுப்பினையும் முதல்–அமைச்சர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். குறிப்பிட்ட அளவு மழை பெய்யாதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் அவர் பிரதமரிடம் பட்டியலிட்டார்.

மேலும் செய்திகள்