அரியானூர் 1,008 சிவலிங்க கோவிலில் அக்‌ஷயஐஸ்வர்ய லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு நாளை மறுநாள் நடக்கிறது

சேலம் அரியானூர் கஞ்சமலை அடிவாரத்தில் இருக்கும் 1,008 சிவலிங்க கோவிலில் ஸ்ரீஅக்‌ஷயஐஸ்வர்ய லட்சுமி நாராயண பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செ

Update: 2017-01-05 22:15 GMT

சேலம்,

சேலம் அரியானூர் கஞ்சமலை அடிவாரத்தில் இருக்கும் 1,008 சிவலிங்க கோவிலில் ஸ்ரீஅக்‌ஷயஐஸ்வர்ய லட்சுமி நாராயண பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். முக்கிய திருவிழா நாட்களில் இங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீஅக்‌ஷயஐஸ்வர்ய லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்