மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்

மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2017-01-16 07:12 GMT
இது பற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மெட்ரோ ரெயில்வே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரெயில் நிறுவனத்தில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி, ரெயில் ஆபரேட்டர், ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 745 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஸ்டேசன் கண்ட்ரோலர்/டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 194, கஸ்டமர் ரிலேசன்ஸ் அசிஸ்டன்ட் - 65, ஜூனியர் என்ஜினீயர் - 160, பராமரிப்பாளர்கள் - 311 பணியிடங்கள் உள்ளன. இவை தவிர அக்கவுண்ட் அசிஸ்டன்ட் - 8, ஆபீஸ் அசிஸ்டன்ட் - 6, ஸ்டெனோகிராபர் - 1 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 28 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள், டிரெயின் ஆபரேட்டர்/ஸ்டேசன் கண்ட்ரோல் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதர 3 மற்றும் 4 ஆண்டு கால பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கும் இதர பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன.

எழுத்துத் தேர்வு, உளவியல் தேர்வு, மருத்துவ பரிசோதனை, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இந்த பணிகளுக்கு 15-12-2016-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது 28-1-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்