தொல்லியல் துறை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு: பல்லாவரம் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம்

பல்லாவரம் நகராட்சி, பழைய பல்லாவரம் சர்வே எண், 56, 63–க்கு உட்பட்ட பகுதி தொல்லியல் துறை ஆராய்ச்சி.

Update: 2017-02-03 23:00 GMT
தாம்பரம்,

பல்லாவரம் நகராட்சி, பழைய பல்லாவரம் சர்வே எண், 56, 63–க்கு உட்பட்ட பகுதிகள் தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக கடந்த 2010–ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

தொல்லியல் துறை அளவீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 6–ந் தேதி அந்த பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் அளவீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்லியல் துறை போராட்டக்குழு மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் நேற்று பல்லாவரம் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொல்லியல் துறையினர் அளவீடு செய்வதை தடை செய்ய வேண்டி அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்