தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் 3–வது நாளாக ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று 3–வது நாளாக கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-02-03 22:00 GMT

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று 3–வது நாளாக கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை, மாற்றுப்பணிக்காக அரசு கலைக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டவர்களை உடனே திரும்பப்பெற வேண்டும். புதிதாக யாரையும் நியமனம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றுப்பேசினார். மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைபொதுத்தேர்வுக்கானஉழைப்பூதியம் கண்காணிப்பாளர்களுக்கு ரூ.400 வழங்க வேண்டும். பறக்கும்படை உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும். விடைத்தாள் ஒன்று திருத்துவதற்கு ரூ.15 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்