கடவுள்களின் பிறப்பிடமாக கருதப்படும் நகரம்!

மெக்சிகோ நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந் திருக்கும் ‘டியோட்டிஹுவாக்கன்’ நகரம், இன்றுவரை புதிர்கள் நிறைந்த ஒரு மர்ம நகரமாக விளங்குகிறது.

Update: 2017-02-18 16:15 GMT
இந்நகரம் யாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை.

ஏஜ்டெக் இன மக்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் இந்த நகரம், கி.மு. 100 முதல் கி.பி. 650 வரையிலான கால கட்டத்தில் இயங்கி கொண்டிருந்திருக்கும் என்று தொல்லியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
மேலும், அந்த நகரம்தான் கி.பி. 1400-க்கு முன்பு, பூமியின் வடக்கு அரைக்கோளத்திலேயே மிகப் பெரிய நகரமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘டியோட்டிஹுவாக்கன்’ என்ற பெயர், நாட்டால் என்ற மொழியைப் பேசிய ஏஜ்டெக் மக்களால் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெயருக்கு ‘கடவுள்களின் பிறப்பிடம்’ என்று பொருளாம்.
எகிப்தைப் போல இந்நகரிலும் பிரமிடு அமைந்திருக்கிறது. இந்த பிரமிடுக்குள் ஏராளமான உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஏஜ்டெக் இன மக்கள், கடவுள்களின் பிறப்பிடம் என்ற பொருளில் பெயர் வைத்ததற்குக் காரணம், குறிப்பிட்ட இந்நகரத்தில்தான் கடவுள்கள் பிரபஞ்சத்தைப் படைத்தனர் என்று நம்பியதுதான்.

இந்த விந்தை நகரம் குறித்த புதிரை விடுவிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்