நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது.

Update: 2017-02-27 22:15 GMT

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–387, ஐதராபாத்–348, விஜயவாடா, தனுகு–349, பார்வாலா–360, மும்பை–392, மைசூரு–383, பெங்களூரு–380, கொல்கத்தா–402, டெல்லி–368.

கறிக்கோழி கிலோ ரூ.63–க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.49–க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்