மகளிர் தினத்தை முன்னிட்டு சுவாதி பெண்கள் இயக்கத்தினர் ஊர்வலம்

மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் சுவாதி பெண்கள் இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2017-03-08 22:45 GMT
கரூர்,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று கரூரில் நடைபெற்றது. ஊர்வலம் கரூர் 80 அடி சாலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்துக்கு சுவாதி பெண்கள் இயக்க தலைவி ஜெயம்மாள் தலைமை தாங்கினார். சுயாட்சி இயக்க தேசிய துணை தலைவர் கிறிஸ்டினாசாமி சிறப்புரையாற்றினார்.

ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயத்தையும், இயற்கை வளத்தையும் அழிக்கும் திட்டத்தை, தமிழகத்தில் மத்திய அரசு திணிக்க கூடாது.

அத்தியாவசிய உணவு பொருட்கள்

நெடுவாசல் உள்பட பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ரேஷன் கடைகளை முறைப்படுத்தி அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்