உதட்டு அசைவே ‘பாஸ்வேர்டு’

தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த உடல்அசைவு மொழியையும் பாஸ்வேர்டாக பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக மாறி உள்ளது.

Update: 2017-03-21 07:26 GMT
ல்லாம் எலக்ட்ரானிக் மயமாகிப் போன பின்பு, பாஸ்வேர்டுகளே பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. எண்கள், ஈமோஜி முதல் கண்ரேகை வரை எத்தனையோ பாஸ்வேர்டு (ரகசிய குறியீடு) முறைகள் வந்துவிட்டன. தற்போது புதுமையாக உதட்டு அசைவை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறையை ஹாங்காங்கைச் சேர்ந்த பாப்திஸ்த் பல் கலைக்கழக ஆய்வுக்குழு உருவாக்கி உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த உடல்அசைவு மொழியையும் பாஸ்வேர்டாக பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக மாறி உள்ளது. ஏற்கனவே கைரேகை, கண்ணசைவு, இதயத்துடிப்பு போன்றவற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறைகள் வெளிவந்துவிட்டன.

கைரேகை, கண்ணசைவு முறைகளைப் போலவே உதட்டு அசைவுகளும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும். சிறப்பு அம்சமாக உதட்டு அசைவை ஈரடுக்கு பாஸ்வேர்டு யுத்தியாக பயன்படுத்த முடியும். உதட்டு அசைவைப் போலவே, உதட்டின் அளவையும் ஒரு தனித்துவமான அடையாளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே உதட்டின் அளவையும், உச்சரிக்கும்போது ஏற்படும் உதட்டு அசைவையும் பாஸ்வேர்டுகளாக பயன்படுத்தலாம்.

வார்த்தை உச்சரிப்புகள் ஏற்கனவே பாஸ்வேர்டாக உள்ளது இங்கே நினைவூட்டத்தக்கது. சொல் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், உச்சரிப்பின்போது ஒவ்வொருவரின் உதடு அசைவிலும் சிறு மாற்றம் இருக்கும். அதை அடிப்படையாக வைத்து இந்த நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு சாத்தியமாகிறது. விரைவில் இந்த பாதுகாப்பு யுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்