குடும்பத்தகராறில் அனல் மின்நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மீஞ்சூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக அனல்மின் நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-03-21 22:30 GMT

மீஞ்சூர்

மீஞ்சூரை அடுத்த வல்லூரில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு வேலை செய்து வந்தவர் நிஷார் அகமது. இவர் தனது குடும்பத்தினருடன் அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் நிஷார் அகமது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் நிஷார் அகமது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தீக்குளித்து தற்கொலை

மேலும், மீஞ்சூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 32). குடிபோதைக்கு அடிமையான இவர் தினமும் மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவரது மனைவி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த தேவேந்திரன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறித்துடித்த அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து மீஞ்சூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்