மறைவுக்கு பின் சாதனை

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்கிற உண்மையைச் சொன்னவர் டார்வின்.

Update: 2017-03-27 13:15 GMT
தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகிற்கு உணர்த்த அவர் பெரிதும் போராட வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் பிறந்த டார்வின், தன் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல், விலங்குகளின் பின்னாலும், பூச்சிகளின் பின்னாலும் ஓடிக்கொண்டிருந்தார். அதன்பிறகு தந்தையின்

அறியுறுத்தலின்படி மருத்துவம் படித்தார் டார்வின். ஆனால், அங்கு நடக்கும் அறுவை சிகிச்சைகள், மருந்து பாட்டில்கள், நோயாளிகளின் அவஸ்தை அவரைப் பயமுறுத்தின. மேற்கொண்டு மருத்துவம் படிக்காமல், இயற்கையியல் வல்லுநர் படிப்பு படித்தார். தென்அமெரிக்காவின் கனிம வளங்களைக் காணச் சென்ற அவர், ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றிப் பார்த்தார். இயற்கையின் பல மாற்றங்களை உற்று நோக்கினார்.

விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தவர், அவை குறிப்பிட்ட சில உயிரினங்களின் எலும்புகளோடு பொருந்திப் போவதைக் கண்டார். இதற்கான காரணத்தைத் தேடியபோது, ஒருசில விலங்கிலிருந்து பலவகை விலங்குகள் உருமாறி வந்திருப்பதைக் கண்டார். இதுபோல, மனிதனும் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்கிற உண்மையை அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்ல, அவர் பல ஆண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. என்றாலும், இந்த உண்மையை உலகம் உடனே ஒப்புக்கொள்ளவில்லை.

டார்வினின் கருத்தை பெரும்பாலானவர்கள் எதிர்த்தனர். என்றாலும், முயற்சியை கைவிடாத அவர்தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ‘உலகத்தைக்கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப் படுகிறேனோ, அன்றைக்கே நான் இறந்துபோவேன்’ என்று கூறினார். டார்வின் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அவரது கண்டுபிடிப்பு உண்மை என எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்