உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-03-30 21:15 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஞ்சாயத்து, கிருஷ்ணாநகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் அரசு கலை–அறிவியல் கல்லூரி, சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

முற்றுகை

இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூர்யகலாவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்