மராட்டிய அரசு ஊழியர்களுக்காக 7–வது ஊதிய கமி‌ஷனை ஏற்க அரசு தயாராக உள்ளது மேல்சபையில் நிதிமந்திரி அறிவிப்பு

மராட்டிய அரசு ஊழியர்களுக்காக 7–வது ஊதிய கமி‌ஷன் பரித்துறையை ஏற்க அரசு தயாராக உள்ளது என மேல்சபையில் நிதிமந்திரி அறிவித்துள்ளார். கவன ஈர்ப்பு தீர்மானம் மேல்சபை கூட்டம் நேற்று நடைபெற்று அப்போது உறுப்பினர் கபில் பாட்டீல், 7–வது ஊதிய கமி‌ஷன் குறித்து கவன ஈர்

Update: 2017-03-30 22:15 GMT

மும்பை,

மராட்டிய அரசு ஊழியர்களுக்காக 7–வது ஊதிய கமி‌ஷன் பரித்துறையை ஏற்க அரசு தயாராக உள்ளது என மேல்சபையில் நிதிமந்திரி அறிவித்துள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்

மேல்சபை கூட்டம் நேற்று நடைபெற்று அப்போது உறுப்பினர் கபில் பாட்டீல், 7–வது ஊதிய கமி‌ஷன் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு பதில் அளித்து நிதிமந்திரி சுதிர் முங்கண்டிவார் கூறியதாவது:–

மராட்டிய அரசு 7–வது ஊதிய கமி‌ஷனை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ.21 ஆயிரத்து 500 கோடி நிதிசுமையை ஏற்க தயாராக உள்ளது. ஊதிய கமி‌ஷன் அமலுக்கு வந்ததும் மாநில அரசு ஊழியர்கள் சம்பளம் 22 முதல் 23 சதவீதம் உயரும்.

7–வது ஊதிய கமி‌ஷன் குறித்து ஆய்வு செய்ய பாக்ஷி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கமிட்டி அடுத்த மாதம் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்யும். அதன்பின்னர் ஊதிய கமி‌ஷனை நடைமுறை படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்