புதுவை அரசை கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி கருத்து

புதுவை அரசின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Update: 2017-04-06 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையேயான அதிகாரப்போட்டி மோதல் முற்றியுள்ள நிலையில் ஒருவர் மீது மற்றொருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். நாள்தோறும் புதுப்புது குற்றச்சாட்டுகளை கூறி இருதரப்பினரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பெடி பதிவிட்டு வருகிறார். அதில் அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை எடுத்து வைக்கிறார்.

நிபுணர் குழு

இந்தநிலையில் நேற்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு ஊழியர் களின் வருங்கால வைப்புநிதி ரூ.32.36 கோடி சமீபத்தில் எடுத்து செலவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் இருக்க நிபுணர்கள் குழு அமைத்து கண்காணிப்பது கட்டாயமாகும்.

புதுவை அரசு செயலாளர்கள் விதிகளை மீறி தங்களுக்கு மேல் உள்ளவர்களுக் காக வளைத்து கொடுக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் அரசு நிர்வாகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்