பாகிஸ்தானில் ஒரே நாளில் 4 தலீபான் பயங்கரவாதிகளுக்கு தூக்கு

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்காக கடந்த மாதம் முதல் ராணுவ கோர்ட்டுகள் மீண்டும் செயல்படத்தொடங்கி உள்ளன.

Update: 2017-04-25 21:03 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்காக கடந்த மாதம் முதல் ராணுவ கோர்ட்டுகள் மீண்டும் செயல்படத்தொடங்கி உள்ளன. இதற்காக அந்த நாட்டின் அரசியல் சாசனம் திருத்தப்பட்டுள்ளது. ராணுவ கோர்ட்டுகள் 160–க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்துள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவில் உள்ள மத்திய சிறையில் நேற்று ஒரே நாளில் தலீபான் பயங்கரவாதிகள் 4 பேர் தூக்கில் போடப்பட்டனர்.  தூக்கில் போடப்பட்டவர்கள் ரகுமான் உதீன், முஸ்டாக் கான், உபைத் உர் ரகுமான், ஜப்பார் இக்பால் ஆவார்கள். 4 பேரும் ராணுவ கோர்ட்டுகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் பாதுகாப்பு படையினரையும், போலீசாரையும் மட்டுமல்லாது, அப்பாவி மக்களையும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி கொன்று குவித்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். அவர்கள் எந்த சிறையில், என்ன நேரத்தில் தூக்கில் போடப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை.

மேலும் செய்திகள்