சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த தமிழக அரசின் அறிக்கை நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

வரலாறு காணாத வறட்சி காரணமாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அரசு அறிவித்தது. வறட்சியால் பயிர் கருகுவதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி மற்றும் தற்கொலையால் உயிரிழந்தனர். இந்த நிலையில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பல்வேறு காரணங்களால் உயிரிழ

Update: 2017-04-29 22:15 GMT

திருவாரூர்,

வரலாறு காணாத வறட்சி காரணமாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அரசு அறிவித்தது. வறட்சியால் பயிர் கருகுவதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி மற்றும் தற்கொலையால் உயிரிழந்தனர். இந்த நிலையில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையின் நகலை தீயிட்டு எரித்தனர். வறட்சியால் தான் விவசாயிகள் உயிரிழந்தனர் என அறிக்கையை திருத்தம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்