இனிமேல் ஈசுவரப்பாவை பற்றி எதுவும் பேச மாட்டேன் எடியூரப்பா பரபரப்பு பேட்டி

இனிமேல் ஈசுவரப்பாவை பற்றி எதுவும் பேச மாட்டேன் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2017-05-02 23:15 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இனிமேல் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் பற்றியோ அல்லது ஈசுவரப்பா பற்றியோ எதுவும் பேச மாட்டேன். இந்த வி‌ஷயத்தில் எனக்கு நானே வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டுள்ளேன். கருத்து வேறுபாடுகள் குறித்து மேலிட தலைவர்களுடன் பேசுவேன். கட்சியை பலப்படுத்துவது, அடுத்த ஆண்டு(2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவது ஆகியவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்துவேன்.

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 6, 7–ந் தேதிகளில் மைசூருவில் நடக்கிறது.

மத்திய அரசை குறை கூறுவதில்...

இதில் கர்நாடக அரசின் தோல்விகள், வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய அரசு கொடுத்துள்ள நிதியை மாநில அரசு சரியாக பயன்பத்துவது இல்லை. மத்திய அரசை குறை கூறுவதிலேயே சித்தராமையா காலத்தை கழிக்கிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


மேலும் செய்திகள்