தென்காசியில் குடிநீர் வசதி கேட்டு நகர சபை அலுவலகம் முற்றுகை

தென்காசியில் குடிநீர் வசதி கேட்டு நகர சபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-03 20:30 GMT
தென்காசி,

தென்காசியில் குடிநீர் வசதி கேட்டு நகர சபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் இணைப்பு

தென்காசி 26–வது வார்டு பகுதி மக்களுக்கு பாத்தியப்பட்ட இசக்கியம்மன் கோவில், ஆசாத் நகர் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பகுதி வழியாக தென்காசி நகருக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு செல்லும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் அமைத்த போது கோவிலுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த இணைப்பை நேற்று முன்தினம் முறையான ஆவணங்கள் இல்லையென கூறி நகர சபை அதிகாரிகள் துண்டித்தனர்.

முற்றுகை

குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்கக்கோரி 26–வது வார்டு பொதுமக்கள் நேற்று தென்காசி நகர சபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களுடன் ஆணையாளர் ஏகராஜ், என்ஜினீயர் தங்கபாண்டியன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் முறையான ஆவணங்களை பெற்று இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்