ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கக்கோரி திருவாரூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-03 23:00 GMT
திருவாரூர்,

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும். தரமான உதிரி பாகங்களை வாங்கி பஸ்களை பராமரிக்க வேண்டும். டீசல் வருவாய் நெருக்கடி கொடுக்க கூடாது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு பாடைக்கட்டும் போராட்டம் நடத்துவதாக போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பாடைக்கட்டு போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணை தலைவர் அமலதாஸ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட துணைத்தலைவர்கள் வைத்தியநாதன், திருநாவுக்கரசு, ஆட்டோ தொழிற் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அனிபா, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி மோகன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்