இறைச்சிக்காக மாடு விற்பனை தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

Update: 2017-05-30 22:30 GMT

திருச்சி,

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் நேற்று மாலை மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி போல் முகமூடி அணிந்த ஒருவரிடம், மாடு போல் தலையில் கொம்பு வைத்து வேடம் அணிந்திருந்த ஒருவர் மனு கொடுப்பது போலவும், சாப்பாட்டு தட்டினை ஏந்துவது போலவும் நின்று கொண்டிருந்தனர். மத்திய அரசை கண்டித்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அமீர்பாட்சா, ரபீக் முகமது, ரகீம் மற்றும் பெரியார் சரவணன் உள்பட பலர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்