சூறை காற்றுடன் பலத்த மழை மரம்-மின்கம்பங்கள் விழுந்தன

திருமானூர் அருகே சூறை காற்றுடன் பலத்த மழைபெய்ததால் மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன.

Update: 2017-08-07 22:45 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்நிலையில் பெரம்லூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரங்கள் மற்றும் சில மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் ஒருவரது வீட்டின் மீது மரமும், மின்கம்பமும் விழுந்தன.

சாலையோரங்களில் உள்ள மரங்களும், மினகம்பங்களும் சாலையின் ஓரத்தில் விழுந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பலத்த மழை பெய்ததால் கிராமங்களில் உள்ள தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், கிராமத்திற்குள்ளும் சில மின்கம்பங்கள் சாய்தன. இதனால் பலரது வீட்டு மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் அகிலா, ஜெயராஜ், மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவைகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்