சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74¾ லட்சம் வசூல்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74¾ லட்சம் வசூல்

Update: 2017-08-08 22:30 GMT
சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் பக்தர்களால் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இந்த மாதத்தில் முதல் முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் குமரதுரை, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, கரூர் உதவி ஆணையர் சூரியநாராயணன், கோவில் மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், கண்காணிப்பாளர் விஜயராணி, மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், காணிக்கையாக ரூ.74 லட்சத்து 86 ஆயிரத்து 507 ரொக்கமும், 1 கிலோ 710 கிராம் தங்கமும், 7 கிலோ 64 கிராம் வெள்ளியும், மற்றும் வெளிநாட்டு பணம் (அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்) இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருச்சி அய்யப்ப சேவா சங்கம், அம்மன் அருள், ஆத்மசங்கம் ஆகியவற்றை சேர்ந்த தன்னார்வலர்களும், மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்