தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 104 பேர் கைது

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஜெ.தீபா, தீபக் ஆகியோரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புதுக்கோட்டையில் தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

Update: 2017-08-21 22:45 GMT

புதுக்கோட்டை,

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஜெ.தீபா, தீபக் ஆகியோரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புதுக்கோட்டையில் தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை தீபா பேரவையினர், மாவட்ட செயலாளர் ஹஜ் முகமது அலி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீபா பேரவையை சேர்ந்த 104 பேரை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்