நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-08-22 23:00 GMT
சங்கரன்கோவில்,

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதனை அமல்படுத்தும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க தலைவர் திருமலை முருகன், தலைமை ஆசிரியர் கழக தலைவர் சேதுராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சண்முக சுந்தரம் வரவேற்றார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி மாரியப்பன், கோரிக்கைகள் குறித்து பேசினார். மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் முருகன், பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த பிச்சைக்கனி, மாரியப்பன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுகுமார் நன்றி கூறினார்.

ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் சுப்பராயலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் கணேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் மோட்சக்கண், அரசு கல்லூரி ஆசிரியர் கூட்டணி கழக செயலாளர் கருணாநிதி, ஆசிரியர் பயிற்றுனர் சங்கத்தை சேர்ந்த அமுதா ஜாஸ்மின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தாசில்தார் ஹென்றி பீட்டர் தலைமை தாங்கினார். முத்தானந்தம் தேவதாஸ் முன்னிலை வகித்தார். ராஜையா வாழ்த்தி பேசினார். ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த இளங்கோ கண்ணன், ராஜேஷ், ராஜேந்திரன், மணிமேகலை, மாரிமுத்து, மோகன், சத்தியநாராயணன், சந்தனகுமார், பஞ்சராஜன், சங்கர்ராம், பூமாரி, பக்தன், சுப்பிரமணியன், சாலமன் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த மைதீன்பட்டாணி, ஸ்டேன்லி, மரியான், ரத்தினம், திருமலைக்குமார், ஸ்டாலின் அசோக் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்க நிர்வாகி வேல்ராஜன் நன்றி கூறினார்.

வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிவகிரி தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த எம்.ராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில் நாயகம், மைதீன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சிக்கந்தர் பாட்ஷா, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்.ராஜ், வருவாய்த்துறை சங்கம் மாடசாமி, வேளாண்மை துறை சங்கம் அண்ணாதுரை, தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோபிக்கண்ணன் நன்றி கூறினார். இதே போல் அம்பையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் குருசந்திரன் தலைமை தாங்கினார். இதில் நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடையநல் லூர், செங்கோட்டை ஆகிய ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்