மும்பை மாநகராட்சி கமி‌ஷனருடன், ராஜ் தாக்கரே திடீர் சந்திப்பு

மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தாவை, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது, அவர் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Update: 2017-10-11 23:15 GMT

மும்பை,

மும்பையில் அண்மையில் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு ரெயில் நிலைய நடைமேம்பாலங்களை ஆக்கிரமித்து இருக்கும் வியாபாரிகளும் காரணம் என கூறப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து மும்பையில் நவநிர்மாண் சேனா சார்பில் நடந்த கண்டன போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, ரெயில் நிலையங்களில் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த அரசுக்கு 15 நாட்கள் கெடு விதித்தார்.

ராஜ் தாக்கரேயின் எச்சரிக்கையை தொடர்ந்து, உடனடியாக ரெயில் நிலையங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், நேற்று ராஜ்தாக்கரே மாநகராட்சி அலுவலகத்தில் கமி‌ஷனர் அஜாய் மேத்தாவை திடீரென சந்தித்து பேசினார். அப்போது, சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என அவர் கமி‌ஷனரிடம் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக எச்சரிக்கை பலகைகள் நகர் முழுவதும் நடைபாதைகளில் வைக்க வேண்டும் என்றும், சட்டவிரோத நடைபாதை வியாபாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பான மனுவை மாநகராட்சி கமி‌ஷனரிடம், ராஜ் தாக்கரே வழங்கினார்.

மேலும் செய்திகள்