படங்களை படமாக பாருங்கள், வரலாறாக பார்க்காதீர்கள்’ முக்தார் அபாஸ் நக்வி சொல்கிறார்

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கைவண்ணத்தின் உருவாகியிருக்கும் படம் ‘பத்மாவதி’. ராஜ்பூர் ராணி பத்மாவதியின் வரலாற்று பின்னணியுடன் இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2017-11-12 21:31 GMT

மும்பை,

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கைவண்ணத்தின் உருவாகியிருக்கும் படம் ‘பத்மாவதி’. ராஜ்பூர் ராணி பத்மாவதியின் வரலாற்று பின்னணியுடன் இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே இந்த படத்தின் நாயகியாக நடத்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 1–ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ‘பத்மாவதி’ வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, இந்த படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று ராஜ்புத் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அபாஸ் நக்வி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

படங்களை படங்களாக பாருங்கள் அதை வரலாற்றோடோ அல்லது புவியியலோடோ ஒப்பிட்டு பார்க்கவேண்டாம்.

ஒரு படத்தில் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பிடிக்காததை அங்கேயே விட்டுவிடுங்கள். மற்றபடி அந்த படத்திற்கு நான் ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. நான் படங்களை படங்களாக மட்டுமே பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்