வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும் மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் தீர்மானம்

வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-11-29 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோடு வீரப்பம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆர்.பி.கே.மோகனசுந்தரம் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார்.

இதில் சங்கத்தலைவராக கே.ராஜேந்திரன், கவுரவ தலைவர்களாக எஸ்.கே.ராஜேஸ்வரன், ஆர்.சின்னப்பன், செயலாளராக எஸ்.பி.சாமிநாதன், பொருளாளராக பி.சண்முகம் என்கிற சிகாமணி, துணைத்தலைவர்களாக பி.ஜெகதீசன், டி.லோகநாதன், துணைச்செயலாளர்களாக ஆர்.மாதேஸ்வரன், கே.ஏ.முருகேசன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்