கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் மீனவர்கள் வேண்டுகோள்

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2017-12-30 22:30 GMT

ராமேசுவரம்,

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24–ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி நாட்டுப்படகில் செல்ல கடந்த 3 ஆண்டுகளாக அனுமதிக்கப்படவில்லை.

மேலும் கடந்த ஆண்டு இந்த திருவிழா சமயத்தில் இலங்கை கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இங்கிருந்து மீனவர்கள் யாரும் திருவிழாவுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்த ஆண்டு நாட்டுப்படகில் செல்ல மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் தடையை மீறி சுமார் 60 நாட்டுப்படகுகளில் 150 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கச்சத்தீவுக்கு செல்வோம் என்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்