ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் அண்ணா மீனவர் தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் அண்ணா மீனவர் தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Update: 2017-12-31 22:30 GMT
குளச்சல்,

குமரி மாவட்ட அண்ணா மீனவர் தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் குளச்சலில் நடந்தது. இதற்கு சங்க செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமை தாங்கினார். தலைவர் சுரபி செல்வராஜ், துணைத்தலைவர் செர்ஜியூஸ், பெலிக்ஸ் ராஜன், அமலதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு சங்க இணைய தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத், ஜெயசீலன், சங்க இணை செயலாளர்கள் பாஸ்கர், குமார், ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் இணை செயலாளர் தூத்தூர் ஜெசி வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் ஜெகன் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் கடலில் மீன் பிடிக்கும் போது காணாமல் போகும் குமரி மாவட்ட மீனவர்களை கண்டு பிடிப்பதற்கு குளச்சலில் ஹெலிகாப்டர் தளமும், தேங்காப்பட்டணத்தில் அதிவேக நவீன விசைப்படகு தளமும் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்றும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்