விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,288 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,288 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-01-01 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் மது குடித்து இருப்பதை கண்டறியும் கருவி, வேகத்தை கண்டறியக்கூடிய கருவிகள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

1,288 வழக்கு

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,288 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 488 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 96 பேர் மீதும், 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 187 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 31 பேர் மீது என உள்பட மொத்தம் 1,288 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்