நகராட்சி-கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Update: 2018-01-18 23:17 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சட்டசபை முற்றுகை, காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் புதுவை சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதத்துக்கு கூட்டு போராட்டக்குழு கன்வீனர் ஆனந்தகணபதி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினார்கள். உண்ணாவிரதத்தில் கூட்டு போராட்டக்குழு கன்வீனர்கள் கண்ணன், ராமச்சந்திரன், ராம்குமார், சீனுவாசன், சகாயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்