பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணமேல்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-02-08 02:16 GMT
மணமேல்குடி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மணமேல்குடி கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி ஒன்றிய பகுதி முழுவதும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக கணக்கெடுப்பு செய்து மத்திய, மாநில அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் அளவை உயர்த்தி ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 50 கிலோ வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, பழனிசாமி சேகர், ராஜமாணிக்கம் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்