கடன்தொல்லையால் செங்கல் சூளை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் செங்கல் சூளை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-08 03:09 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே அரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல்(வயது 37). செங்கல் சூளை உரிமையாளர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சமாதேவியில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ஞானவேல் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக அதே ஊரை சேர்ந்த சிலரிடமும், தனியார் நிதி நிறுவனத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாததாலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாலும் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞானவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஞானவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ஞானவேல் கடன் தொல்லை அதிகரித்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்