நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு பஸ்களில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டிருப்பதை கண்டித்து நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.

Update: 2018-02-19 22:45 GMT
நாகர்கோவில்,

அரசு பஸ்களில் இரண்டு மடங்கு கட்டணம் உயர்வு செய்யப்பட்டிருப்பதை கண்டித்து குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தாமஸ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிதம்பரம்பிள்ளை, பொருளாளர் சொரிமுத்து ஆகியோர் முன்னிலை   வகித்தனர். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் கஸ்தூரி நிறைவுரையாற்றினார்.

இதில் ஷெலின்மேரி, தேவசகாயம், வில்சன், ஜாண்சன், தங்கசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்