துணை ராணுவத்தில் 447 பணியிடங்கள்

இந்திய துணை ராணுவ படையில் 447 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2018-02-20 05:26 GMT
ந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் துணை ராணுவ பிரிவாக இது செயல்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் கான்ஸ்டபிள் தரத்திலான டிரைவர், டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 447 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கான்ஸ்டபிள் டிரைவர் பணிக்கு 344 இடங்களும், கான்ஸ்டபிள் டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணிக்கு 103 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 19–3–2018–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணையான கல்வித்

தகுதி பெற்றவர்களும், செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வுசெய்யும் முறை :

உடல்அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19–3–2018–ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்   https://cisfrectt.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்