108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் காந்திசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-03-08 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் காந்திசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அழகர்சாமி கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 2017-ம் ஆண்டுக்கான சம்பள உயர்வுக்கான பணத்தை முழுமையாகவும், ஈட்டிய விடுப்பு தொகையையும் வருகிற 31-ந்தேதிக்குள் ஜி.வி.கே. ஈ.எம்.ஆர்.ஐ. நிர்வாகம் வழங்க வேண்டும். இதனை வழங்காவிட்டால் பொதுமக்கள் மன்றத்தில் முறையிட்டு மக்கள் பங்களிப்போடு அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர் பாபு உள்பட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்